108 கணபதி பாடல் தியானத்திற்காக -1
1.அல்லல்2. கலை 3.விநாயகனே 4.திகட சக்கர 5.பிள்ளையார் 6. கணபதி 7.மண்ணுலகத்தினில் 8.திருவாக்கும் 9,10 திருவும் கல்வியும்
மேற்கண்ட வரிகள் ஒரு சூத்திரத்தை போல இதை மனனம் செய்து கொண்டால்
கீழ்கண்ட 10 பாடலும் மனதில் தங்கும் அடஹி மனதில் தியானித்து பொருள்களை கற்பனையில் விரித்து கணேசனை நினைத்து உருகுங்கள்
- அன்புடன் R.P.OM
7.ஓம்
1.அல்லல்2. கலை 3.விநாயகனே 4.திகட சக்கர 5.பிள்ளையார் 6. கணபதி 7.மண்ணுலகத்தினில் 8.திருவாக்கும் 9,10 திருவும் கல்வியும்
மேற்கண்ட வரிகள் ஒரு சூத்திரத்தை போல இதை மனனம் செய்து கொண்டால்
கீழ்கண்ட 10 பாடலும் மனதில் தங்கும் அடஹி மனதில் தியானித்து பொருள்களை கற்பனையில் விரித்து கணேசனை நினைத்து உருகுங்கள்
- அன்புடன் R.P.OM
1.ஓம்
அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் – நல்ல
குணமதிக மாமருணை கோபுரத்துள் மேவும்
செல்வக் கணபதியை கைதொழுதக் கால்!
2.ஓம்
கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவறு மொருபரை சரணம் சரணம்
உமைசிவை அம்பிகை சரணம் சரணம்
அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினைகெட அருள்பவ சரணம்
நினைபவர் பவமற நினைபவ சரணம்
நெடியவன் விழிதரு நெடியவ சரணம்
வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினி லுயரிய பெரியவ சரணம்
முறைதெரி மறையவ நிறையவ சரணம்
முடியடி தெரிவரு முதியவ சரணம்
சரணம் சரணம் கணபதி சரணம்
சரணம் சரணம் கஜமுக சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவறு மொருபரை சரணம் சரணம்
உமைசிவை அம்பிகை சரணம் சரணம்
அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினைகெட அருள்பவ சரணம்
நினைபவர் பவமற நினைபவ சரணம்
நெடியவன் விழிதரு நெடியவ சரணம்
வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினி லுயரிய பெரியவ சரணம்
முறைதெரி மறையவ நிறையவ சரணம்
முடியடி தெரிவரு முதியவ சரணம்
சரணம் சரணம் கணபதி சரணம்
சரணம் சரணம் கஜமுக சரணம்
3.ஓம்
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வெட்கை தணிவிப்பான் – விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து
4.ஓம்
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணி யாவுறை
விகட சகரன் மெய்ப்பதம் போற்றுவோம்
5.ஓம்
பிள்ளையார் பிள்ளையார்
பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரையின் ஓரத்திலே
அரசமரத்தின் நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
மண்ணினாலே செய்திடினும்
மஞ்சளினாலே செய்திடினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை
நெஞ்சில் காட்டும் பிள்ளையார்
அவல்பொரி கடலையும்
அரிசிகொழுக் கட்டையும்
கவலையின்றி தின்னுவார்
கண்ணைமூடித் தூங்குவார்
கலியுகத்தின் விந்தையை
காணவேண்டி அனுதினமும்
எலியின்மீது ஏறியே
இஷ்டம்போல சுற்றுவார்
பிள்ளையார் பிள்ளையார்
பெருமைவாய்ந்த பிள்ளையார்
பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரையின் ஓரத்திலே
அரசமரத்தின் நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
மண்ணினாலே செய்திடினும்
மஞ்சளினாலே செய்திடினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை
நெஞ்சில் காட்டும் பிள்ளையார்
அவல்பொரி கடலையும்
அரிசிகொழுக் கட்டையும்
கவலையின்றி தின்னுவார்
கண்ணைமூடித் தூங்குவார்
கலியுகத்தின் விந்தையை
காணவேண்டி அனுதினமும்
எலியின்மீது ஏறியே
இஷ்டம்போல சுற்றுவார்
பிள்ளையார் பிள்ளையார்
பெருமைவாய்ந்த பிள்ளையார்
6.ஓம்
மண்ணுலகத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுற
கண்ணுதல் உடையதோர் க்ளிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!
கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கருமம் இல்லையே!
8.ஓம்
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவர் தம்கை!
9.ஓம்
திருவும் கல்வியும் சீருண்ட் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையை காய்க்கவும்
பருவ மாய்நம துள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்து பிள்ளையை பேணெவாம்!
10.ஓம்
திருவும் கல்வியும் சீரும் சிறப்பும்
உன்திருவடி புகழ்பாடும் திறமும்
நல் உருவும் சீலமும் ஊக்கமும்
தாழ்வுறா மனமும் தந்தெனதுள்ளத்தமர்ந்தவா
குருவும் தெய்வமுமாகி அன்பாளர்தம்
குறை தவிர்க்கும் குணப்பெரும் குன்றமே
வெருவும் சிந்தை விலக கஜானனம்
108 பாடல் தியானத்திற்காக

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக