புதன், 13 மார்ச், 2013

அகர வரிசையில் கணபதி போற்றி

அகர வரிசையில் கணபதி போற்றி
தொகுப்பு
- அன்புடன் R.P.OM

1.

12 விநாயகா twelve


12 விநாயகா 

12 வகையான யஜ்ஞங்கள்.

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு 12 வகையான யஜ்ஞங்களை உபதேசம் செய்கிறார். ஆன்மிக வாழ்க்கையின் சாதனைகள் அனைத்தும் இங்கு யஜ்ஞங்களாக உருவகப்படுத்தப் படுகின்றன.


தைவமேவாபரே யஜ்ஞம் யோகின: பர்யுபாஸதே

ப்ரஹ்மாக்னாவபரே யஜ்ஞம்

யஞ்யேனைவோப ஜூஹ்வதி 4.25

1. ப்ரஹ்மஞான யஜ்ஞம்
ஜீவாத்மாவை பரமாத்மாவாகப் புரிந்து கொள்வது ப்ரஹ்மஞான யஜ்ஞம். ப்ரம்மமாகிய அக்னியில் தன்னைத்தானே ஹோமம் செய்யும் யஜ்ஞம் இது. இதில் அக்னி - பரமாத்மா. ஹவிஸ் - ஜீவாத்மா. அக்னியில் போட்ட ஹவிஸ் அக்னிமயமாவது போல் இந்த யஜ்ஞத்தில் ஜீவாத்மா தன்னைப் பரமாத்மாவாக உணருகிறது. சிலர் இந்த யஜ்ஞத்தைச் செய்கிறார்கள் என்கிறார் ஸ்ரீக்ருஷ்ணர்.
8.இது நாம் சாமான்யமாக அறிந்திருக்கும் அக்னியில் ஹவிஸ்ஸை ஹோமம் (தியாகம்) செய்யும் யஜ்ஞம்.
ச்ரோத்ராதீனீந்த்ரியாண்யன்யே

ஸம்யமாக்னிஷுஜுஹ்வதி

சப்தாதீன்விஷயானன்யே

இந்த்ரியாக்னிஷு ஜுஹ்வதி 4.26



புலனடக்கத்தை இரண்டாகப் பிரித்து பகவான் இங்கு ஹோமமாகச் சொல்கிறார்.
3. இந்த்ரிய நிக்ரஹ யஜ்ஞம்
ஸம்யமம் என்றால் கட்டுப்பாடு.. ஸம்யமம் என்ற அக்னியில் ச்ரோத்ராதி (கண், காது முதலான ) இந்த்ரியங்களை ஆஹுதி பண்ணும் யஜ்ஞம் இந்த்ரிய நிக்ரஹ யஜ்ஞம். இந்த்ரிய விஷயங்களை விட்டுவிட்டு (தர்மமாகக்கூட அனுபவிக்காமல்) கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது. இதில் அக்னி - ஸம்யமம். ஹவிஸ் - இந்த்ரியங்கள்.
4. விஷயக்ரஹண யஜ்ஞம்
விஷயங்களை த்யாகம் செய்யாமல் அளவாக தர்மமாக அனுபவிப்பது. இங்கு அக்னி - இந்த்ரியங்கள். ஹவிஸ் - இந்த்ரிய விஷயங்கள். ஒப்பிடுக: - 2.64
ஸர்வாணீந்த்ரியகர்மாணி

ப்ராணகர்மாணி சாபரே

ஆத்மஸம்யமயோகாக்னௌ

ஜுஹ்வதி ஞானதீபிதே. 4.27
5. ஆத்மஸம்யம யஜ்ஞம்
இந்த்ரிய விஷயங்களின் தன்மை என்னவென்று நன்கு உணர்ந்து,சாஸ்த்ரங்கள் கூறிய அறவழியில் நடந்து அறிவுபூர்வமாக மனத்தைக் கட்டுப்படுத்தி மூச்சுக்காற்று மற்றும் கர்மேந்த்ரிய ஞானேந்த்ரிய வ்யாபாரம் (பொறிகளின் செயல்பாடுகள்) அனைத்தையும் மனத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆத்மஸம்யம யஜ்ஞம். அதாவது, அளவான, தரமான நெறிப்படுத்தப்பட்ட எண்ணங்களோடு இருப்பதே ஆத்மஸம்யம யஜ்ஞம். இங்கு, அக்னி - மனக்கட்டுப்பாடு. ஹவிஸ் - இந்த்ரியங்களின் செயல்கள்.
த்ரவ்யயஞாஸ்தபோயஜ்ஞா:

யோகயஜ்ஞாஸ்ததாபரே

ஸ்வாத்யாயஞானயஜ்ஞாஸ்ச

யதய: ஸம்சிதவ்ரதா: 4.28
‘வ்ரத அனுஷ்டானத்தின் மூலம் தங்கள் புத்தியை நன்கு தீட்டிக்கொண்ட யதிகள் சிலர் கீழ்வரும் யஜ்ஞங்களை அனுஷ்டிக்கிறார்கள்’ என்று தொடர்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்
6. த்ரவ்யயஜ்ஞம்:
தன் பொருளை பிறர்க்கு தானமாகக் கொடுப்பது த்ரவ்யயஜ்ஞம். தானத்தின் லக்ஷணத்தைக் கூறுகையில் ‘என்னுடையது’ என்ற புத்தியை விடுவது தானம் என்கிறார் ஸ்ரீ பகவத்பாத சங்கரர்; தானம் செய்வது சித்தசுத்திக்கு ஒரு ஸாதனம். அதனால் லோப (தானே எல்லாம் அடையவேண்டும் என்ற ஆசை) புத்தி போய் பரம சாந்தி கிட்டும். த்ரவ்ய யஜ்ஞத்தில் வாங்குபவன் கை - அக்னி. கொடுக்கும் பொருள் - ஹவிஸ்.
7. தபோயஜ்ஞம்
தானாகவே விரும்பி தன் சுகங்களைக் குறைத்துக்கொள்வது ‘தபஸ்’. உதாரணம்: மௌனவிரதம், உண்ணாவிரதம், குளிர்காலத்தில் வெந்நீரில் குளிக்காமல் இருப்பது, வெயில் காலத்தில் தினம் சிறிது நேரமாவது மின்விசிறி, ஏ.சி. இல்லாமல் இருப்பது - போன்றவை.
8. யோக யஜ்ஞம்
பதஞ்சலி மகரிஷியின் அஷ்டாங்கயோகம் தான் இங்கு விசேஷமாகச் சொல்லப்படுகிறது. யோகம் என்றால் இங்கு ஒழுக்கம் என்று குறித்துக்கொள்ளலாம். இயமம், நியமம், ஆஸனம் ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை, த்யானம், ஸமாதி என்பன அஷ்டாங்க யோகமாகும். ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒழுக்கமின்மையை நீக்கிவிடுவது யோகயஜ்ஞம். உடல், மனம், அறிவு, ஒழுக்கம் எல்லாம் இதில் அடங்கும். இங்கு அக்னி - ஒழுக்கம். ஹவிஸ் - ஒழுக்கமின்மை.
9. ஸ்வாத்யாய யஜ்ஞம்
பாராயணம் செய்வது, மந்த்ரங்களை மனப்பாடம் செய்வது போன்றவை ஸ்வாத்யாய யஜ்ஞமாகும். தொடர்ந்து இவற்றைச் செய்து வந்தால் மனத்தில் நன்கு பதிந்து விடுகிறது. புத்தகம் இல்லாமலேயே சந்தர்ப்பத்திற்கேற்ப படித்த நல்ல விஷயங்கள் கை கொடுத்து ப்ரச்னைகளைக் களைய உதவும். மன அமைதி உண்டாகிறது. தனிமனித சாந்தி மட்டுமல்லாமல் சமுதாய சாந்தியும் உண்டாகிறது. இதில் அக்னி - மறதியின்மை. ஹவிஸ் - மறதி.
10 ஞான யஜ்ஞம்
விசாரம் பண்ணுவது , பொருள் உணர்ந்து பாராயணம் செய்வது, போன்றவை ஞானயஜ்ஞமாகும்.

அபானே ஜூஹ்வதி ப்ராணம்

ப்ராணே(அ)பானம் ததாபரே

ப்ராணபானகதீ ருத்வா

ப்ராணாயாம பராயணா: 4.29
11. ப்ராணாயாம யஜ்ஞம்
இதை தமிழில் வாசியோகம் என்பர். ‘சரீர அந்தஸ்ஸஞ்சாரீ வாயு: ப்ராண:’ - அதாவது உடம்புக்குள்ளே ஸஞ்சரிக்கும் வாயுவிற்கு ப்ராணன் என்று பெயர். - என்று தர்க்க சாஸ்த்ரம் ப்ராணனுக்கு லக்ஷணம் சொல்கிறதுஆயாமம் என்றால் செம்மைப்படுத்துவது. உடலுக்குள்ளே ஸஞ்சரிக்கும் காற்றை ஒழுங்குபடுத்தும் முறைக்கு ப்ராணாயாமம் என்று பெயர். இது பூரகம், அந்த: கும்பகம், ரேசகம், பாஹ்ய கும்பகம் என்று நான்கு அங்கங்களைக் கொண்டது.
பூரகம் - அபானே ப்ராணம் ஜூஹ்வதி - வெளியில் உள்ள காற்றை உள்ளே இழுப்பது. இதில் அக்னி - அபானன். ஹவிஸ் - ப்ராணன்.
ரேசகம் - ப்ராணே அபானம் ஜுஹ்வதி - உள்ளிருக்கும் காற்றை வெளியில் விடுவது.
இதில் அக்னி - ப்ராணன். ஹவிஸ் - அபானன்.
ப்ராணாயாம யஜ்ஞமானது அந்தக் கரணத்தை நன்கு சுத்தம் செய்து பெரிய க்ஷேமத்தைத் தரக்கூடியது. ப்ராணாயாம கோசத்தைச் சரிச் செய்தால் அன்னமய, மனோமய கோசங்களுக்கு நன்மை உண்டாகும். விவேகபூர்வமாக ப்ராணனை ஜெயிப்பதன் மூலம் ரோகத்தை வெல்லலாம். மனத்தை வெல்லலாம். மனமும் மூச்சும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. சுவாசத்தைச் சரிப்படுத்தினால் எண்ணங்கள் சரியாகும். எண்ணங்களைச் சரிப்படுத்தினால் சுவாசம் சரியாகும். அதனால்தான் எந்தக் கர்மாவாக இருந்தாலும் ப்ரம்மசர்யம், ஸன்யாஸம் போன்ற எந்த நிலையாக இருந்தாலும் ப்ராணாயாமம் இன்றியமையாதது.
அபரே நியதாஹாரா:
ப்ராணான்ப்ராணேஷூ ஜூஹ்வதி
ஸர்வே(அ)ப்யேதே யஜ்ஞவித:
யஜ்ஞக்ஷ பித கல்மஷா: 4.30
12. ஆஹாரநியம யஜ்ஞம்
“மற்ற சிலர் ஆகாரத்தை நியமத்தோடு செய்து கொண்டு ப்ராணனில் ப்ராணனை ஹோமம் செய்கிறார்கள்” என்று ஸ்ரீக்ருஷ்ணர் தொடர்கிறார்.
இங்கு ப்ராணனே அக்னி. ப்ராணனே ஹவிஸ். ‘அநியதப்ராணான் நியதப்ராணேஷு ஜுஹ்வதி’- அதாவது முறையற்ற சுவாஸ விஷயங்களை முறையாக மாற்றுவதற்கு அனுகூலமாக ஆகார நியமங்களைக் கடைப்பிடிக்கிறார்கள். ஏனென்றால் ஆகார நியமம் ப்ராணனை ஒழுங்குபடுத்துகிறது. “ப்ராணே சரீரம் ப்ரதிஷ்டிதம். சரீரே ப்ராண: ப்ரதிஷ்டித:” என்பது தைத்திரீய உபநிஷத் வாக்கியம். அன்னத்திற்கும் ப்ராணனுக்கும் சம்பந்தம் இருக்கிறது.
த்வௌபாகம் பூரயேதன்னம்

தோயேனைகம் ப்ரபூரயேத்

மாருதஸ்ய ப்ரசாரார்த்தம்

சதுர்த்தம் அவசேஷயேத்
என்று உண்ணும் நியதி கூறப்பட்டிருக்கிறது. அரை வயிற்றுக்கு உணவும் கால் வயிறு நீரும் உட்கொண்டு மீதம் கால் வயிறு வாயுவிற்கு ஒதுக்கவேண்டும். உண்பதையே ஒரு யாகமாகச் செய்வதற்கு ப்ராணாக்னிஹோத்ரம் என்று பெயர். எத்தகைய உணவு உண்ணத்தக்கது, எது தகாதது என்று ஆயுர்வேதம் நிர்ணயம் செய்கிறது. எந்த உணவை எவ்வாறு உண்ணவேண்டும் என்றும் முறை உள்ளது. உண்பதற்கு முன்பு அன்னத்தைச் சுத்தி செய்வதற்கு ‘பரிக்ஷேசனம்’ முதலிய ஸம்ஸ்காரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. எந்த உணவை எப்படி சமைக்க வேண்டும் என்பதற்கும் விதிமுறைகள் கூறப்பட்டிருக்கின்றன. உணவு சமைப்பவனின் மனநிலைக்கேற்ப சமைக்கப்பட்ட உணவு குணத்தையோ (நல்ல தன்மை) தோஷத்தையோ (கெட்ட தன்மை) அடைகிறது. இதற்கு ஆச்ரய குண: ஆச்ரய தோஷ: என்று பெயர். இதைப்பற்றி ஸ்ரீ இராமானுஜர் விசேஷமாகப் பேசியிருக்கிறார். சமைப்பவர்க்கும் ஸ்னான ஜபாதி நியமங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. மந்த்ரபூர்வமாகத்- தான் சமைக்கவேண்டுமென்பது நமது பண்டைய கலாசாரம். இந்த நம் கலாசாரம் இன்று எங்கோ காணாமல் போய்விட்டது.
இந்த 12 வித யஜ்ஞங்களையும் பற்றி அறிந்தவர்கள் யஜ்ஞானுஷ்டானத்தின் மூலம் கல்மஷங்களை (மாசுகளை) எல்லாம் நீக்கிக்கொள்கிறார்கள்” என்கிறார் பகவான்.
‘சிலர் இந்த யஜ்ஞத்தைச் செய்கிறார்கள். வேறு சிலர் அந்த யஜ்ஞத்தைச் செய்கிறார்கள்’ என்று ஸ்ரீக்ருஷ்ணர் சொன்னாலும் - இவையெல்லாம் ஆன்மிக சாதனைகளாதலால் எல்லாரும் எல்லா யஜ்ஞங்களையும் செய்தேயாக வேண்டும். இதில் சிலீஷீவீநீமீ அல்லது ஷீஜீtவீஷீஸீ கிடையாது. சாஸ்திரத்தில் ச்ரத்தை, ஈச்வரனிடத்தில் பரிபூர்ண பக்தி, தர்மத்தை அனுஷ்டிப்பதில் ருசி, ஆகியன இருந்தால் இந்த யஜ்ஞங்களை சிரமமே இல்லாமல் அனாயாஸமாகப் பண்ணலாம். ஒருவனின் புத்தி இந்த தர்ம மார்க்கத்தில் ப்ரவர்த்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் காயத்ரி மந்த்ரத்தின் மூலம் சூர்ய பகவானை ‘தியோ யோ ந: ப்ரசோதயாத்’ என்று வேண்டுவது.
யஜ்ஞசிஷ்டாம்ருதபுஜ:

யாந்தி ப்ரஹ்ம ஸனாதனம்

நாயம் லோகோ(அ)ஸ்த்யயஜ்ஞஸ்ய

குதோ(அ)ன்ய: குருஸத்தம 4.31
கண்ணன் தொடர்கிறார்: - ஹே! குருவம்சத்து உத்தமனே! யஜ்ஞமிச்சமாகிய அம்ருதத்தை உண்பவர்கள் (யஜ்ஞ பலனைப் பெற்றவர்கள் யஜ்ஞத்தின் மூலம் சித்தசுத்தி அடைந்தவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்) யாண்டும் உள்ள இறைவனை அடைகிறார்கள். ஜீவாத்ம புத்தி நீங்கி பரமாத்மாவாகவே தன்னை உணருகிறார்கள். இந்த யஜ்ஞங்களைப் பண்ணினால்தான் தர்மமான சுகம் கிடைக்கும். யஜ்ஞம் பண்ணாதவர்களுக்கு இந்த லோக சுகமே இல்லை. பிறகு பரலோக சுகத்தைப்பற்றிக் கேட்கவும் வேண்டுமோ?”

எண்கள் விநாயகா 1 to 108 numbers

எண்கள் விநாயகா

ஒன்று
ஓம்
இரண்டு
மூன்று
நான்கு
5
6
7

7 ஏழு விநாயகா

எழுகோடி மந்திரங்கள்:

**********************

நமஹா  விநாயகா 
சுவாஹா விநாயகா 
சுவதா விநாயகா 
பட்  விநாயகா 
உம்பட் விநாயகா 
வௌஷட் விநாயகா 
வஷட்  விநாயகா 


8
9
நவரகசிய விநாயகா



10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
28  விநாயகா 
28 கொடிய நரக விநாயகா 
***************************
1.அசிபத்திரமாகும் அவீசி,அந்தகூபம்,
தாமிரை நரகம் [பிறன் மனைவி ,குழந்தை,பொருள்]
2.
தாமிஸ்ரம்
29
30
31
32
33
34
35
326
37
38
38
39
40

41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
ஆண்டுகள் 60
1.பிரபவ

2.விபவ

3.சுக்கில

4.ப்ரமோதூத

5 ப்ரஜோத்பத்தி

6.ஆங்கிரஸ

7. ஸ்ரீமுக

8.பவ

9.யுவ

10.தாது

11.ஈசுவர

12.வெகுதான்ய

13.ப்ரமாதி

14.விக்கிரம

15.விஷு


16.சித்ரபானு

17.சுபானு

18.தாரண

19.பார்த்திப

20.விய

21.ஸர்வஜித்

22.ஸர்வதாரி

23.விரோதி

24.விக்ருதி

25.கர

26.நந்தன

27.விஜய

28.ஜய

29.மன்மத

30.துர்முகி

31.ஹேவிளம்பி

32.விளம்பி

33.விகாரி

34.சார்வரி

35.ப்லவ

36.சுபகிருது

37.சோபகிருது

38.குரோதி

39.விசுவாவசு

40.பராபவ

41.ப்லவங்க

42.கீலக

43.சௌமிய

44.சாதாரண

45.விரோதிகிருது

46.பரிதாபி

47.ப்ரமாதீ

48.ஆனந்த

49.ராக்ஷஸ

50.நள

51.பிங்கள

52.களயுக்தி

53.சித்தார்த்தி

54.ரௌத்ரி

55.துன்மதி

56.துந்துபி

57.ருத்ரோத்காரி

58.ரக்தாக்ஷி

59.குரோதன

60.அக்ஷய

செவ்வாய், 12 மார்ச், 2013

கணபதி தியான பாடல் - 7 [51 பாடல்],- அன்புடன் R.P.OM 8056156496

கணபதி தியான பாடல் - 7 [51 பாடல்]
- அன்புடன் R.P.OM 8056156496
விநாயகர் அநுபூதி மனப்பாட வசதிக்காக அகர வரிசைப்படுத்தி இருக்கிறேன் மனப்பாடம் செய்து தியானம் ப்ழகவும்
முதலில்
மனப்பட சூத்திரம்  - 1 [ அ ]- 4 பாடல்
அச்சம்விடுத்தேன் /அத்தேவர்களும்/ ஆயிள்கைஉளநம்/ அளவை கடந்தான்

1.அச்சம் விடுத்தேன் அரனார் முதலோர்மெச்சும் படியாய் மிளிர் ஐங்கர! நின்பச்சைத் தளிராம் பதமே பலமாய்இச்சை யூடனே பிடித்தேன் இதமே!



2.அந்தே வர்களும் அயன் மால் அரனும்சுத்தாத் துவிதத் துறைநின் றவரும்'கத்தா கரிமா முகத்தான்' எனவேவித்தா ரமொடு விளம்பும் இறையே!


3.அயில்கை உளநம் அறூமா முகற்கேமயிலூர் திதனை மகிழ்ந்தே அளித்தான்செயிர்தீர் அடியார் சிறப்பாம் வகையில்ஒயிலாய் நலம்தந்(து) உயர்த்தும் அவனே.


4.அளவைக் கடந்தான்: அகிலம் கடந்தான்:உளதத் துவத்தின் உயர்வைக் கடந்தான்:வளமாம் நிலைமேல் வசிப்பான் பெரியோன்உளமே அறிந்துஇன் புறவே வருவாய்!

மனப்பட சூத்திரம்  - 2 [ ஆ ,இ ,உ,ஊ,எ ,ஏ,ஒ ,ஓ ] 9  -  பாடல் 
5.ஆரா அமுதம் என ஆ சுகவிசீராப் புகலும் திறமே அருள்வாய்!தீராக் கலைகள் திகழ்வா ரிதியே!வாராய்! வளமே வளர்வா ரணனே!



6.ஆற்றல் அறீயேன் அடிசெய் பிழைதீர்சீற்றம் தவிர்வாய் திகழ்சிற் பர! யான்சாற்றும் தமிழ்மா லைதனைத் துதிக்கைஏற்றே அருள்வாய்! அருள்வாய் இனிதே.


7.இருநான்(கு) அவதானம் எண்சித்திகளும்பெருமான் உமையின் பெரும்பிள் ளையவன்தருவான்! தருவான்! தரவே விரைவாய்வருவான்! வருவான்! வழுத்தாய் மனனே!



8.உம்பர் புகழும் உறூதிப் பொருளே!தும்பிச் சிரனே! தொழுதேன்: தொழுதேன்:நம்பும் எனைநீ நழுவ விடாமல்அம்பொன் கரத்தாய் எனைஆண்(டு) அருளே!



9.ஊழி முதல்வன் உயர்வே ழமுகன்வாழி! திருசத் திகளும் அணியாம்வாழி! கவினார் வாச மலர்த்தாள்வாழி! அடியார் வளம்வா ழியவே!


10.எந்தப் பிறப்பை எடுத்தா லும் உனைச்சொந்தத் தமிழால் துதிசெய் திடவேகொந்தே அலர்தார்க் குழல்வல் லபையாள்!சிந்தைக்(கு) உகந்தாய்! சிறப்பாய் அருளே!

11.ஏகாக் கரனை எழில் ஐங்கரனைப்பூகாப் பவனைப் பொறுமைக் குணனைமாகா ளியவள் மகனை மனனே!நீகா எனவே நிதமும் பணியே!


12.ஒருகொம் புடையான்; உயர்மோ தகமே;விரும்பும் பெருமான்; விடையோன் குமரன்;சுரும்பார் தொடையன்; சுகமா குமெலாம்அருள்வான்; அருள்வான்; அடியார் அவர்க்கே!


13.ஓடித் திரிவாய் உலகுஏ ழும்மிகவாடித் திரிவாய் மனனே! தகுமோகூடிக் குலவா ஒருகோ டனைநீபாடிப் பணிவாய் பணிவாய் நலமே!


மனப்பட சூத்திரம்  - 2 [  ] -  பாடல் 

thogai vinayagaa

அகிற்கூட்டு - 5 விநாயகா
எரிகாசு
ஏல
கற்பூர
சந்தன

அ க்னி விநாயகா

அ ங்க விநாயகா 

திங்கள், 11 மார்ச், 2013

108 கணபதி தியான பாடல் - 5,வாகை ஓம் கணபதி -1


108 கணபதி தியான பாடல் - 5[ 3padal ]
வாகை 
ஓம் கணபதி -1
*வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்துவாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவசவாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணைவாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே.

*கைத்தல நிறைகனி அப்ப மொடவல் பொரிகப் பியகரிமுகன் - அடிபேணிக்கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!கற்பகம் எனவினை - கடிதேகும்;
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்மற்பொருதிரள் புய - மதயானைமத்தள வயிறனை உத்தமிபுதல் வனைமட்டவிழ் மலர்கொடு - பணிவேனே; 
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்முற்பட எழுதிய - முதல்வோனேமுப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்அச்சது பொடிசெய்த - அதிதீரா;
அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்அப்புன மதனிடை - இபமாகிஅக்குற மகளுடன் அச்சிறு முருகனைஅக்கண மணமருள் - பெருமாளே! ---திருப்புகழ் .


ஓம் கணபதி -1

இப்படி வரிசையாய் 1,2 என்று 108 வரை தியானிக்க
ஓம் கணபதி - 2
ஓம் கணபதி -3
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
வ ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 
ஓம் கணபதி - 108

108 கணபதி தியான பாடல் - 4,கணநாதா கணநாதா .... கணநாதா




108 கணபதி தியான பாடல்  - 4

கணநாதா கணநாதா  அன்பெனும் வடிவே கணநாதா
கணநாதா கணநாதா அழகாய் சிரித்தாய் கணநாதா

கணநாதா கணநாதா ஆருயிர் தோழா கணநாதா
கணநாதா கணநாதா ஆசையை ஒழித்தாய்  கணநாதா

கணநாதா கணநாதா இனிய இசையே கணநாதா
கணநாதா கணநாதா இச்சா சக்தியே கணநாதா



கணநாதா கணநாதா ஈகை கடலே கணநாதா


கணநாதா கணநாதா ஈச பிதாவே கணநாதா



கணநாதா கணநாதா உத்தமத்திருவே கணநாதா

கணநாதா கணநாதா உள்ளொளி தந்தாய்  கணநாதா

கண நாதா கண நாதா ஊக்கம் அளித்தாய்
கணநாதா கணநாதா ஊழ்வினை களைந்தாய் கணநாதா
கணநாதா கணநாதா எம்குலதேவா கணநாதா
கணநாதா கணநாதா எங்கும் நீயே  கணநாதா
கணநாதா கணநாதா ஐந்து முகத்தோய் கணநாதா
கணநாதா கணநாதா ஐயம் களைந்தாய்  கணநாதா
கணநாதா கணநாதா ஒற்றுமை அளிப்பாய் கணநாதா
கணநாதா கணநாதா ஓமெனும் ஒலியே கணநாதா
கணநாதா கணநாதா ஔடத பொருளே  கணநாதா

கணநாதா கணநாதா ஔடதமாவாய்   கணநாதா


கணநாதா கணநாதா கண்ணே மணியே கணநாதா
கணநாதா கணநாதா காப்பாய் எங்களை கணநாதா
கணநாதா கணநாதா குருவே குருவே கணநாதா
கணநாதா கணநாதா கொம்பொடித்தாய் கணநாதா
கணநாதா கணநாதா கொழுக்கட்டை பிரியா கணநாதா
கணநாதா கணநாதா கோமானே சீமானே கணநாதா
கணநாதா கணநாதா சங்கடம் தீர்ப்பாய் கணநாதா
கணநாதா கணநாதா சக்தியின் மைந்தா கணநாதா
கணநாதா கணநாதா சங்கரன் புதல்வா கணநாதா
கணநாதா கணநாதா சபையினினில் எழுவாய் கணநாதா
கணநாதா கணநாதா சபலம் ஒழிப்பாய் கணநாதா
கணநாதா கணநாதா சகலமும் நீயே கணநாதா
கணநாதா கணநாதா சிங்கார ரூபா கணநாதா
கணநாதா கணநாதா சில்லென்ற மழையே கணநாதா
கணநாதா கணநாதா செல்ல குழந்தையே கணநாதா
கணநாதா கணநாதா செவ்வண்ண மேனி  கணநாதா
கணநாதா கணநாதா சைகாரா  கணநாதா
கணநாதா கணநாதா சைதாபேட்டை  கணநாதா

கணநாதா கணநாதா சொர்ண சொரூபா  கணநாதா


கணநாதா கணநாதா சொல்திறம் தந்தாய்  கணநாதா


கணநாதா கணநாதா சுகந்த மேனியா  கணநாதா

கணநாதா கணநாதா சுகமாயிருக்கிறோம்  கணநாதா


கணநாதா கணநாதா சோதிடம் ஆனாய் கணநாதா


கணநாதா கணநாதா  சோதனை களைநந்தாய்  கணநாதா

கணநாதா கணநாதா சௌபாக்யமே  கணநாதா


கணநாதா கணநாதா சௌபாக்யம் தந்தாய்  கணநாதா

கணநாதா கணநாதா ஞான தந்தாய்   கணநாதா


கணநாதா கணநாதா ஞானப்பழமே கணநாதா
கணநாதா கணநாதா தரணிதரனே கணநாதா

கணநாதா கணநாதா தரணி ஆள்கிறாய்  கணநாதா

கணநாதா கணநாதா தாமரை மலரே  கணநாதா
கணநாதா கணநாதா தாயாய் காப்பாய் கணநாதா

கணநாதா கணநாதா திருவே குருவே   கணநாதா



கணநாதா கணநாதா திகட சக்கர  கணநாதா
கணநாதா கணநாதா தீயின் வடிவே கணநாதா


கணநாதா கணநாதா தீவினை ஒழித்தாய்  கணநாதா



கணநாதா கணநாதா தும்பிக்கையாய் கணநாதா


கணநாதா கணநாதா துன்பம் தீர்த்தாய்   கணநாதா



கணநாதா கணநாதா தூய்மை தருவாய் கணநாதா


கணநாதா கணநாதா தூய மலரே  கணநாதா




கணநாதா கணநாதா தெளிந்த உள்ளமே  கணநாதா


கணநாதா கணநாதா தெவிட்டா அமுதே  கணநாதா



கணநாதா கணநாதா நல்ல பிள்ளையே கணநாதா
கணநாதா கணநாதா  நலம் பலம் வளம் தருவாய் கணநாதா
கணநாதா கணநாதா நானிலம் வரைந்தாய்  கணநாதா


கணநாதா கணநாதா நாரணன் போற்றும்  கணநாதா



கணநாதா கணநாதா பரம்பொருளே கணநாதா


கணநாதா கணநாதா பரவெளி இன்பமே  கணநாதா



கணநாதா கணநாதா பாடும் பொருளே கணநாதா


கணநாதா கணநாதா  பாட அருள்வாய்  கணநாதா



கணநாதா கணநாதா பிள்ளை அமுதே கணநாதா


கணநாதா கணநாதா பிள்ளையாரப்பா  கணநாதா


கணநாதா கணநாதா புண்ணியம் புருஷா  கணநாதா
கணநாதா கணநாதா புண்ணிய ஈந்தாய்   கணநாதா


கணநாதா கணநாதா பொற்சித்திரமே  கணநாதா
கணநாதா கணநாதா பொன்னே மணியே கணநாதா

கணநாதா கணநாதா மங்கள உருவே கணநாதா
கணநாதா கணநாதா மங்களம் தந்தாய்   கணநாதா


கணநாதா கணநாதாமுக்தி தந்தாய் கணநாதா
கணநாதா கணநாதா முருகனின் துணையே கணநாதா


கணநாதா கணநாதா மோகன ரூபா கணநாதா
கணநாதா கணநாதாமோகம் களைந்தாய்  கணநாதா

கணநாதா கணநாதா வல்லபை நாதா  கணநாதா
கணநாதா கணநாதா வரம் பல தந்தாய்  கணநாதா

கணநாதா கணநாதா வாழ்வான வாழ்வே கணநாதா
கணநாதா கணநாதா வாழிய வாழி  கணநாதா

கணநாதா கணநாதாவில்லாதி வில்லனே  கணநாதா

கணநாதா கணநாதா விதியினை களைந்தாய்  கணநாதா


கணநாதா கணநாதா வீடுபேறே கணநாதா
கணநாதா கணநாதா வீரத்திருவே கணநாதா



கணநாதா கணநாதாவையக தலைவா கணநாதா
கணநாதா கணநாதா வையகம் காப்பாய் கணநாதா

- அன்புடன் R.P. 8056156496

108 கணபதி தியானம் பாடல் - 3 இம்மை உண்மை தடைகள் பந்தம் அகற்றும்



108 கணபதி தியானம் பாடல் - 3
இம்மை உண்மை தடைகள் பந்தம் அகற்றும் 

இம்மை மறுமை இரண்டுவ ழிக்கும்
நன்மை தருவான் நலமுறச் செய்வான்
உண்மை பக்தியே உயர்ந்ததென் றுள்ளம்
விம்மும் விதமாய் விக்கினந் தீர்ப்பான்.

உண்மை யன்புடன் உள்ளங் குவிந்து
பண்ணுடன் பாடிப் பரவிப் பணிமின்!
கண்ணில் நிறையுங் களிற்றுக் கடவுள்
எண்ணம் முடிக்கும் இணையில் தெய்வம்



தடைகள் பொடியாய்த் தடம்விட் டோட
மடையகல் வெள்ளம் போலருள் சுரப்பான்;
சடைவிரி கடவுள் சக்தியென் தாயும்
படைபதி குகனும் பணியுமிவ் வேழம்



1.ஓம்


பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.
ஓம் ஓம் ஓம்

2.ஓம்
உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்
அவ் உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன்
அந்த உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.
ஓம் ஓம் ஓம்
.
3.ஓம்
இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும்
அத் தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.
ஓம் ஓம் ஓம்
4..ஓம்
மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான தீர்த்தமாகி
அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன்
அப் போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
ஓம் ஓம் ஓம்

5.ஓம்
செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன்
அந்தப் பொய்யி இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.
ஓம் ஓம் ஓம்

6.ஓம்
வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப் போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
ஓம் ஓம் ஓம்

7.ஓம்
மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன்
நீரிடை நான்காய் நண்ணி அமர்வான்
எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன்
வளியின் எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன்
வானிடை ஒன்றாம் அண்ணல் எவன்
அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.
ஓம் ஓம் ஓம்
8.ஓம்
பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன் பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன் பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.
ஓம் ஓம் ஓம்
ஓம்
இந்த நமது தோத்திரத்தை யாவன்
மூன்று தினமும் உம்மைச் சந்தி களில்தோத் திரஞ்செயினும்
சகல கரும சித்திபெறும் சிந்தை மகிழச் சுகம்பெறும்
எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப் பந்தம் அகல
ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.
ஓம் ஓம் ஓம்

ஓம்
திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில் தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார்
ஓம் ஓம் ஓம்

108 கணபதி தியான பாடல் -2 1.சக்தியாய் 2.மதுரமொழி 3.மங்களத்து நாயகனே 4.மண்ணகம் வளமை எய்த5. முற்பவத்தில் 6. வேழ முகத்து 7.சீத களப செந்தாமரை 8.ஏகதந்தம் 9.ஏகதந்தாய தத்புருஷாய

108 கணபதி தியான பாடல் -2
1.சக்தியாய்  
2.மதுரமொழி 3.மங்களத்து நாயகனே
4.மண்ணகம் வளமை எய்த5. முற்பவத்தில் 6. வேழ முகத்து 7.சீத களப செந்தாமரை 

8.ஏகதந்தம்  9.ஏகதந்தாய தத்புருஷாய 10.



சக்தியாய் சிவமாய் துதி செய 
சித்தியாகிய சொற்பொருள் நல்குவ 
சித்தியானை தன செய்ய போர் பாதமே. 
ஓம்

மதுரமொழி நல்லுமையாள் புதல்வன் மலர்பதத்தை
முதிரநினைய வல்லார்க்கரிதோ முகில்போல் முழங்கி
யதிரநடந்த் திடும்யானையும் தேருமதன் பின்வருங்
குதிரையும்காதங் கிழவியும் குலமன்னனே!

ஓம்
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே
சங்கரனார் தருமதிலாய் சங்கடத்தை சங்கரிக்கும்
எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

மண்ணகம் வளமை எய்த
மலர் தமிழ் ஆட்சி ஓங்கத்
திண்ணமாய் நாட்டில் எங்கும்
தென்றமிழ் இசையே மல்க
விண்ணவர் பணிந்து போற்றும்
விரிசடைச் செல்வர் நந்தம்
கண்ணுதற் கடவுள் தந்த
களிற்றினை பணிதல் செய்வாம்!

முற்பவத்தில் யான்புரிந்த தீவினைகள்
முழுதகற்று முகத்தினானை 
அற்பசுகத் திலெனை யழுத்தா ஐங்ககரணை
பிற்பவமு மகற்றும் கோவை 
சொற்பழுது புரியாத வணிகர்குலம்
தினம் பணியும் துணைத்தாளானை
கற்பகத்தின் மிடியகற்றும் கற்பகமாம்
விநாயகனை கருத்தில் வைப்பாம்!
  
வேழ முகத்து விநாயகனை தொழ 
வாழ்வு மிகுத்து வரும் 
வெள்ளிகொம்பன் விநாயகனை தொழ 
துள்ளிஓடும் வினைகளே 
அப்பம் முப்பழம் அமுது செய்தருளிய 
தொப்பையப்பனை தொழ வினை அறுமே 

கணேசாஷ்டகம்
1. ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கண நாயகம்

2. மௌஞ்சி கிருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோப வீதினம் பாலேந்து விலஸன் மௌலிம்வந்தே அஹம் கணநாயகம்

3. அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம் பக்த ப்ரியம் மதோன்மத்தம்வந்தே அஹம்கணநாயகம்

4. சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூக்ஷிதம் சித்ரரூபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்

5. கஜவக்த்ரம் ஸுர ச்ரேஷ்டம் கர்ணசாமர பூஷீதம் பாசாங்குச தரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்

6. மூஷிகோத்தம ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்

7. யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா ஸ்தூயமானம் மஹபத்மானம்வந்தே அஹம்கணநாயகம்

8. ஸர்வவிக்ன ஹரம்தேவம் ஸர்வவிக்ந விவர்ஜிதம் ஸர்வஸித்திப் ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்

9. கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ: ய: படேந்நர விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரோம் ஸகச்சதி. .






 

ஓம் ஏக தந்தாய நமஹா!
ஓம் ஹேரம்பாய நமஹா!
ஓம் கபிலாய நமஹா!
ஓம் கஜகர்ணாய நம்ஹா!
ஓம் கஜானனாய நமஹா!
ஓம் கணாத்யக்‌ஷாய நமஹா!
ஓம் சுமுகாய நமஹா!
ஓம் சூர்ப்ப கர்ணாய நமஹா!
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம்ஹா!
ஓம் தூம கேதவே நமஹா! 
ஓம் பால ச்ஹந்த்ராய நமஹா!
ஓம் லம்போதராய நமஹா!
ஓம் வக்ர துண்டாய நமஹா!
ஓம் விக்னராஜாய நமஹா!
ஓம் விகடாய நமஹா! 
ஓம் ஸ்ரீ சித்தி புத்தி வினாயகாய நமஹா!
  • ஓம் தத்புருஷாய வித்மஹே
    வக்ரதுண்டாய தீமஹி
    தன்னோ தந்தி: ப்ரசோதயாத்.
    ..

108 கணபதி பாடல் தியானத்திற்காக-1, 1.அல்லல்2. கலை 3.விநாயகனே 4.திகட சக்கர 5.பிள்ளையார் 6. கணபதி 7.மண்ணுலகத்தினில் 8.திருவாக்கும் 9,10 திருவும் கல்வியும்

108 கணபதி  பாடல் தியானத்திற்காக -1
1.அல்லல்2. கலை 3.விநாயகனே  4.திகட சக்கர 5.பிள்ளையார் 6. கணபதி 7.மண்ணுலகத்தினில்  8.திருவாக்கும் 9,10 திருவும் கல்வியும்  

மேற்கண்ட வரிகள் ஒரு சூத்திரத்தை போல இதை மனனம் செய்து கொண்டால் 
கீழ்கண்ட 10 பாடலும் மனதில் தங்கும் அடஹி மனதில் தியானித்து பொருள்களை கற்பனையில் விரித்து கணேசனை நினைத்து உருகுங்கள் 
- அன்புடன் R.P.OM



1.ஓம் 
அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் – நல்ல
குணமதிக மாமருணை கோபுரத்துள் மேவும்
செல்வக் கணபதியை கைதொழுதக் கால்!
2.ஓம் 
கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
 
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவறு மொருபரை சரணம் சரணம்
உமைசிவை அம்பிகை சரணம் சரணம்

அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினைகெட அருள்பவ சரணம்
நினைபவர் பவமற நினைபவ சரணம்
நெடியவன் விழிதரு நெடியவ சரணம்

வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினி லுயரிய பெரியவ சரணம்
முறைதெரி மறையவ நிறையவ சரணம்
முடியடி தெரிவரு முதியவ சரணம்

சரணம் சரணம் கணபதி சரணம்
சரணம் சரணம் கஜமுக சரணம் 
3.ஓம் 
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வெட்கை தணிவிப்பான் – விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து
4.ஓம் 
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணி யாவுறை
விகட சகரன் மெய்ப்பதம் போற்றுவோம்
5.ஓம் 
பிள்ளையார் பிள்ளையார்
பெருமை வாய்ந்த பிள்ளையார்

ஆற்றங்கரையின் ஓரத்திலே
அரசமரத்தின் நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

மண்ணினாலே செய்திடினும்
மஞ்சளினாலே செய்திடினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை
நெஞ்சில் காட்டும் பிள்ளையார்

அவல்பொரி கடலையும்
அரிசிகொழுக் கட்டையும்
கவலையின்றி தின்னுவார்
கண்ணைமூடித் தூங்குவார்

கலியுகத்தின் விந்தையை
காணவேண்டி அனுதினமும்
எலியின்மீது ஏறியே
இஷ்டம்போல சுற்றுவார்

பிள்ளையார் பிள்ளையார்
பெருமைவாய்ந்த பிள்ளையார்
6.ஓம் 
மண்ணுலகத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுற
கண்ணுதல் உடையதோர் க்ளிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

7.ஓம்
 கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கருமம் இல்லையே!

8.ஓம் 

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவர் தம்கை!

9.ஓம் 
திருவும் கல்வியும் சீருண்ட் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையை காய்க்கவும்
பருவ மாய்நம துள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்து பிள்ளையை பேணெவாம்!
10.ஓம் 
திருவும் கல்வியும் சீரும் சிறப்பும்
உன்திருவடி புகழ்பாடும் திறமும்
 நல் உருவும் சீலமும் ஊக்கமும்
தாழ்வுறா மனமும் தந்தெனதுள்ளத்தமர்ந்தவா
குருவும் தெய்வமுமாகி அன்பாளர்தம்
குறை தவிர்க்கும் குணப்பெரும் குன்றமே
வெருவும் சிந்தை விலக கஜானனம்




108 பாடல் தியானத்திற்காக